Ad Widget

டீசலைக் கொடுத்து படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக்தொன் டீசலைக் கொடுத்து தனது கடற்பிரதேசத்தைவிட்டு வெளியில் அனுப்புவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tamil boat people

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிப் பயணித்தபோது இடையில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்த படகு கடந்த சனிக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் படகினைச் சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்த அகதிகளிடம் எந்தவொரு ஆவணங்களும் இல்லாதநிலையில் இந்தோனேசிய மண்ணில் கால்பதிக்க தடைவிதித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்தப் படகை நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலேயே இந்தோனேசிய அதிகாரிகள் குறியாக உள்ளனர். இந்நிலையில் ஆச்சே மாகாணத்துக்கு இந்தோனேசியக் கப்பல் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

படகுக்குரிய டீசல் மற்றும் தேவையான உதவிப்பொருட்களை வழங்கி தமது கடற்பகுதிக்கு அப்பால் அனுப்புவதற்கு இந்தோனேசியா அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு இந்தோனேசியாவில் புகலிடம் வழங்கவேண்டுமென அனைத்துலக மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளது.

Related Posts