டி.ஆர். கெட்டப்பில் நடிக்கிறார் சிம்பு

கடந்த சில மாதமாகவே உடல் எடையை கூட்டியதுடன் தாடி, மீசை வளர்த்து வந்தார் சிம்பு. அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்காக இந்த கெட்டப்புக்கு மாறினார்.

straaa_2836065f

இப்படத்தில் 80களில் இருந்த சிகை அலங்காரம், பெல்பாட்டம் பேன்ட் ஸ்டைலில் தோன்றி நடிக்கிறார். சமீபத்தில் நடந்த பட தொடக்க விழாவில் பங்கேற்ற சிம்பு அசல் அவரது தந்தை டி.ராஜேந்தர் தோற்றத்துக்கு மாற்றி இருந்தார்.

80களில் வரும் கதாபாத்திரத்தில் சிம்புக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இதுதவிர மேலும் 2 வேடங்களில் சிம்பு நடிக்கிறார். மைக்கல் ராயப்பன் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்து தற்போது காமெடியனாக மாறி இருக்கும் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Related Posts