டில்சானுக்கு கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை!

இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு, கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டில்ஷான் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும், அவர் உள்நாட்டில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் இதனாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts