டிடி தனியார் தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாக தொடக்கம்

DD-tvயாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சியான டிடிதொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டிடத்தொகுதியில் மேற்படி நிகழ்வு நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் மங்கள விளக்கை ஏற்றி வைத்த அமைச்சர் அவர்கள் தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைத்ததுடன், தொலைக்காட்சி சேவையினையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

டிடிதனியார் தொலைக்காட்சியானது அரசியல் கலை, கலாசார, சினிமா, பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதான ஒலிபரப்பு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜிப்ரி, யாழ்.நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி சமன்சிகேரா ஆகியோர் உடனிருந்தனர்

தொடர்புடைய செய்தி

ஊடகங்களின் நம்பிக்கையூட்டலின்மையே மக்களின் புலம்பெயர்வுக்கு காரணம்: டக்ளஸ்

Related Posts