டிஜிட்டலில் வெளிவருகிறது ரஜினியின் ‘பாட்ஷா’

ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் ‘பாட்ஷா’. மும்பை டான், ஆட்டோக்காரர் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் பாட்ஷா. ரஜினி நடித்த படங்களில் ‘பாட்ஷா’ படமும் ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்ட படம் என்று சொல்லலாம்.

சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாகி வரும் நிலையில், ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படமும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மீண்டும் வெளியாகும் ‘பாட்ஷா’ படத்தையும் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts