கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இவ்வருடம் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு 577,084 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சை நேர அட்டவணையில் இனி எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது எனவும் அவர் மேலும் கூறினார்.