டிசம்பர் 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு, 50000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பபிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில், 50,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்காக 5,47,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

Related Posts