டிசம்பர் மாதம் மாகாண சபை தேர்தல்!

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம், நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர், அதன் விமர்சனங்களால் தேர்தல் காலதாமதமாகி வருகின்றது. மாகாண சபை தேர்தலுக்கான நடவடிக்கைகளை 225 அமைச்சர்களும் ஒன்று கூடி விரைவாக தீர்மானமொன்றை மேற்கொண்டால், எதிர்வரும் சாதரண பரீட்சைக்கு முன்னதாக அதாவது டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த முடியும்” என கூறினார்.

Related Posts