டிசம்பரில் வேட்புமனு!! ஜனவரி இறுதிவாரம் தேர்தல் !

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (01) கைச்சாத்திட்டார்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் கோரப்படும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது.

Related Posts