டிசம்பரில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு!

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் நிறைவடையவுள்ளது.

இதன்படி, இவற்றுக்கான மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளோம். தேர்தலைப் பிற்போட்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன், இது தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் கருத்து மாற்றமொன்றை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts