டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க யோசனை

அனுமதிச் சீட்டு (டிக்கட்) இன்றி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 1000 ரூபா வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போக்குவரத்து அமைச்சிடம் குறித்த யோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரச பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 250 ரூபா மற்றும் இரட்டிப்பு பஸ் கட்டணம் என்பன அபராதமாக விதிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 10 வருடங்களாக குறித்த அபராதத் தொகை அதிகரிக்கப்படவில்லை என ரமால் சிறிவர்த்தன கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், சில தூரப் பயணங்களுக்கான பஸ் கட்டணம் தற்போது 500 ரூபாவை விட அதிகமாக காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts