டான் ரீவி அலுவலகதில் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம்!

டான் ரீவி அலுவலகத்தினுள் புகுந்த நபரால் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான் ரீவி அலுவலகத்திற்குள் புகுந்து அதன் செய்தியாசிரியர் தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இது ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி. வெளியாகியிருக்கும் காணொளியை பார்க்கும் போது இது நன்கு திட்டமிட்ட தாக்குதல் போல் தோன்றுகின்றது. எத்தகைய மருத்துவ சான்றுகளும் இன்றி தாக்குதலாளி மன நோயாளி என கூறப்படும் செயதிகளின் நம்பக தன்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. இச்சம்பவத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக வன்மையாக கண்டிக்கின்றது.”

என்று அறிக்கையிடப்பட்டுள்ளது

பின்னணி

டான் ரீவி அலுவலகத்தினுள் 8.01.2018 இல் புகுந்த நபர் முதலில் கதிரையால் தயாமாஸ்டரை தாக்கினார். அதை தடுத்து அவரை பிடிக்க முயற்சிக்கையில் அவர் வெளிசென்று வெளியில் தயாராக இருத்த கத்தி பொல்லு ஆகியவற்றுடன் மீண்டும் வந்து அவரை தாக்க முயற்சிக்கையில் ஊழியர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது பாதுகாப்பு கமெரா காணொளிகளும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது சிறு காயங்களுக்குள்ளான தயாமாஸ்டர்  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டார்.

முன்னதாக கேபிள் ரீவி இணைப்பு துண்டிப்பு தொடர்பிலான சம்பவம் என்றே செய்திகள் வந்திருந்தன. விசாரணையின்போது  தாக்குதல் நடத்தியவர் தனிக் குடித்தனம் செய்கிறார் என்றும்  அவரிடம் தொலைக்காட்சியே இல்லை என்றும் அதைவிட அவர் வாழும் பகுதியில் டான் கேபிள் ரிவி சேவையே இல்லை என்றும் தெரிய வந்தது. அவர் மனநோயாளி போல பேசுகிறார். எதுவும் சொல்லவில்லை என்று பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related Posts