டயானாவின் ரூ. 101 கோடி சொத்து- விரைவில் இளவரசர் ஹாரி வசமாகிறது!

இங்கிலாந்து ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளவரசர் ஹாரிக்கு அவருடைய தாயாரான மறைந்த இளவரசி டயானாவின் 101 கோடி ரூபாய் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது.

prince-harry

இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசியான டயானா தம்பதியின் 2 ஆவது மகனான இளவரசர் ஹாரி இங்கிலாந்து விமான படையில் பணிபுரிந்து வருகின்றார்.

இவருக்கு அவரது தாயார் டயானாவின் 101 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்து விரைவில் அவரிடம் வந்து சேரவுள்ளது.

அவரது 30 ஆவது பிறந்தநாள் வரும் செப்டம்பரில் வருகிறது. அந்த சமயத்தில் இந்த சொத்துக்கள் ஹாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இளவரசர் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே விவாகரத்து ஆனதில் டயானாவுக்கு சார்லஸ் கென்சிங்டன் அரண்மனை, நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பல சொத்துக்களை வழங்கினார்.

டயானாவின் சொத்துக்கள் அவரது 2 மகன்களும் 30 வயது அடைந்ததும் சென்றடையும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

அதன்படி இளவரசர் வில்லியமுக்கும் ஏற்கனவே ரூபாய் 100 கோடி சொத்துக்கள் வழங்கப்பட்டது. தற்போது இளவரசர் ஹாரிக்கும் 30 வயது ஆக உள்ள நிலையில் தாயின் 101 கோடி ரூபாய் சொத்துக்கள் வழங்கப்பட உள்ளது.

தற்போது ஹாரி இங்கிலாந்து விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு ரூ. 39,48,450 சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts