டயலொக் – எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றாக இணையவுள்ளன!!

இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும் எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

economic_times எனும் பொருளியல் சஞ்சினை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப் பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது.

எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது.
இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் 9 வீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்களும் ஒன்றிணைவதன் மூலம் 50 வீதமான வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு டயலொக் நிறுவனத்துக்குக் கிடைப்பதாகவும் அச் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts