டக்ளஸ் மீதான கொலை வழக்கு – ஆட்டோ உரிமையாளர் சாட்சியம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் சூளைமேட்டைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார்.

சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சி விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்த விசாரணையில் நேரடி சாட்சிகள் 10 பேர் சாட்சியளித்துள்ளனர். நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சுப்பிரமணி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இந்த சாட்சியத்தைப் பதிவு செய்த நீதிபதி விசாரணையை மார்ச் 31ம் திகதிக்குத் ஒத்திவைத்தார் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts