டக்ளஸ் தேவானந்தா தலையீட்டால் சிங்கள மொழி கற்பித்தல் பிரச்சினைக்குத் தீர்வு!- மு.சந்திரகுமார்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்,

நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் கல்விக் கொள்கை மற்றும் கல்வித் திட்ட நடைமுறைகளுக்கு அமையவும் தேசிய மொழிகள் ஒருங்கிணைப்பு பயில்முறை நடவடிக்கைகளுக்கு அமையவும் எத்தகைய கல்விச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும்.

இத்தகைய நடைமுறையை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டுமென்று நாம் கேட்டுக்கொண்டதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது தொடர்பாக உடனடியாகவே வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் கவனத்திற்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியமையைத் தொடர்ந்து மேற்படி மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Related Posts