டக்ளஸ் அமைச்சரவையில் பேசாதிருந்தார் – ராஜித குற்றச்சாட்டு

டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கு என்ன செய்துவிட்டார். அமைச்சரவையில் வாயில் புட்டு அடைந்தவர் போல் இருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.

பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்ச குடும்பமும் இணைந்து இங்கு வாக்கு மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக நான் அறிகின்றேன். ஆனால் வட பகுதி மக்கள் அனைவரும் மைத்திரிபாலசிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவது என முடிவெடுத்துவிட்டார்கள்.ராஜபக்ச குடும்பத்தினர் காசுகளை மக்களுக்கு கொடுக்கின்றனர். அவ்வாறு உங்களுக்கும் தந்தால் வாங்கி கொள்ளுங்கள் அவ்வாறு பணத்தை வாங்கிய பின்னர் இந்த பணத்தில் வாகனங்களில் வந்து அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
வட மாகாண மக்கள் 30 வருட காலமாக யுத்தத்தால் அல்லலுற்ற மக்கள். ஆனால் இன்று நடைபெறுவது என்ன. அதிவேக பாதைகள் அமைக்கின்றார்கள். ஆனால் அதனை யார் அமைக்கின்றார்கள். இந்தியாவில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் கொண்டு வந்து பாதைகளை அமைக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான வேலை வாய்ப்புகளையும் வழங்கவில்லை.
இவ்வாறு வேலைகளை செய்யும்போது இப்பகுதி கொந்தராத்துக காரர்களுக்கு வேலைகளை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்பகுதி மக்களுக்கு எந்தவிதமான கொந்தராத்தையும் வழங்கவில்லை.இந்தபகுதி மக்கள் அதிவேக பாதைகளை அறிந்திருக்கவில்லை. இப்பகுதி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதில் பலன் இல்லை ஏனெனில் அவர்களிடம் மின்சார கட்டணத்தை வழங்க பணம் இல்லை.

நீர் விநியோகத்தை வழங்குவதிலும் பலன் இல்லை ஏனெனில் அந்த பட்டியல் பணத்தை செலுத்த பணம் இல்லை.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கவில்லை.இது தொடர்பாக அமைச்சரவையில் பேசுகின்றபோது இந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் டக்ளஸ் தேவானந்தா வாய்மூடி மௌனியாக இருந்தார்.
இந்தவேளையில் நான் டக்ளஸை பார்த்து சொன்னேன் நீங்கள் உங்கள் பகுதி மக்களுக்கு துரோகியாக இருக்கின்றீர்கள் என்று. இந்த மக்களுக்கான சேவையில் டக்ளஸ் சேர்ந்திருக்க முடியும். ஆனால் அவர் வாயில் புட்டு அடைந்தவர்போல் இருக்கின்றார். இதனூடாக தனக்கு கிடைத்த வசதிவாய்ப்புகளை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் ரிசாட் பதியுர்தீன் எந்த நேரமும் மக்களுக்காக அமைச்சரவையில் குரல்கொடுப்பதை நான் கண்டேன். இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேளுங்கள் இந்த மக்களுக்காக என்ன செய்துவிட்டார் என. நான் சந்திரகுமார் எமிபிக்கு முன்னால் வைத்தே கேட்டிருக்கின்றேன் ஏன் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை பயந்து இருக்கின்றீர்கள் என. ஆனால் டக்களஸ் தேவானந்தா கேட்காவிட்டாலும் வட பகுதி மக்களுக்காக நான் அமைச்சரவையில் பல தேவைகளை கேட்டிருக்கின்றேன்.
இன்று இந்த மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு எந்தவிதமான வெட்கமும் இன்றி இந்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க பார்க்கின்றார்கள். இந்த மக்களின் உணர்வகளை புரிந்திருந்தால் பல டிபன்டர்களை வைத்துக்கொண்டு மோசடிகளில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம்.இந்த மக்களின் காணிகளை வழங்கியிருந்தால் இந்த மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை முன்னரே இருந்திருந்தால் நாங்கள் செல்வதை முன்னமே கேட்டிருந்தால் இன்று இந்த நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்,

Related Posts