ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரால் கான்சர்!

அமெரிக்காவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடர் பாவித்த பெண் அண்மையில் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்துக்கு 72 மில்லின் அமெரிக்க டொல் நஸ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

johnson-baby-powder

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜக்குலின் (62) என்பவர் கடந்த 35 வருடங்களாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பாவித்து வந்தார். ஆனால் இவருக்கு புற்றுநோய் தாக்கி கடந்த ஒக்டோபர் மாதம் இறந்துபோனார்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் இன் பொருட்களைப் பாவித்ததால்தான் இவருக்கு புற்றுநோய் தாக்கியதாக இவரது உறவினர்கள் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களில் நஞ்சு கலந்த பொருட்கள் பாவிக்கப்பட்டதை நுகர்வோருக்குத் தெரியப்படுத்தவில்லையெனவும் இதற்காக அவர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு 72மில்லியன் அமெரிக்க டொலர் நஸ்டஈடாக வழங்கவேண்டுமெனவும் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் புற்றுநோயைக் கொண்டுவரும் ரல்கம் பாவிக்கப்படுகின்றது. ரல்கம் பாவிப்பதால் புற்றுநோய் பரவும் என ஏற்கனவே செய்திகள் வந்தநிலையில் அமெரிக்காவிலுள்ள அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ரல்கம் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன. ஆனால் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் மட்டும் இதனை நிறுத்தாமல் தொடர்ந்தும் பாவித்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts