ஜே.வி.பிக்கு வழங்கும் வாக்கு ஆபத்தானது!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரைக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் கலந்து கொண்டனர்.

இதில் கலந்தது கொண்டு பேசிய வேட்பாளர் தருமலிங்கம் சித்தார்த்தன் உரையாற்றுகையில்…

ஜேவிபி கட்சிக்கு அளிக்கும் வாக்கு மிகவும் ஆபத்தானதாகும், ஏனெனில் அக்கட்சியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் தமிழர்களுக்கான எந்த பலனையும் தராது.

அதனால் பல ஆபத்துக்கள் தான் எனவும்,சுயேச்சை குழுக்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் பயனற்றவை என்றும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்க எதிர்கட்சிகளின் திட்டமிட்டு குழப்ப களத்தில் இறங்கியவர்கள் தான் சுயேச்சைக்குழுக்கள் இவர்களுக்கு வாக்களிக்காது 5 கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும் தமது சங்கு சின்ன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது உரையில் கூறியுள்ளார்.

Related Posts