ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தினை திறந்து வைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேற்படி தொழில் பயிற்சி நிலையம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், தொழில் வாய்ப்பின்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts