ஜேர்மனியில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 09.05 மணியளவில் (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.35 ) இச்சம்பவம் இடம்பெற்றது.

ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அந்நபரும் கொல்லப்பட்டுள்ளார் என நம்புவதாகவும் பெரிலஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், 7 பேர் உயிரழந்துள்ளனர் எனவும் 8 பேர் படுகாயமடைந்தள்ளனர் எனவும் ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts