ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அஜித் படம்!

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 57வது படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா, முதல்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்திவிட்டு தற்போது ஆந்திராவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இன்டர்நேசனல் போலீசாக நடிக்கும் அஜித், சமூகவிரோதிகளை களையெடுக் கும் கதை என்பதால் இதுவரை அஜித் நடித்த படங்களை விட இந்த படத்தில் கூடுதலான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதோடு, சண்டை காட்சிகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல அதிநவீன கேமராக்களை வைத்து படமாக்கிக்கொண்டிருக்கிறார் சிவா.

மேலும், எப்போதும் சண்டை காட்சிகளில் கூடுதல் ரிஸ்க் எடுக்கும் அஜித், பலமுறை விபத்துக்களில் சிக்கிக்கொண்டு அறுவை சிகிச்சைகள் செய்திருப்பதால், இந்த படத்தில் அவருக்கு எந்தவித பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக ரிஸ்க்கான காட்சிகளில் அவரை வைத்து கவனமாக படப்பிடிப்பு நடத்துகிறார் கள். முக்கியமாக, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பாணியில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் அமைந்திருப்பதால் இந்த படத்திற்கான லொகேசன் மட்டுமின்றி, பாடல்கள், பின்னணி இசையையும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கொடுக்கப் போகிறார்களாம். ஆக, அஜித்தின் 57வது படம் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்கள்.

Related Posts