ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே மிக மோசம் ஸ்பெக்டர்! : முத்தக்காட்சிகளுக்கு இந்தியாவில் தடை

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள் வருவது வழக்கம். அப்படி அந்தப் படங்கள் வெளியாகும்போது, கிட்டத்தட்ட திருவிழா மாதிரி ஒரு தோற்றம் இருக்கும்.

குறிப்பாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த நான்கு படங்கள் வெளியான போதும் அந்த எபெக்டைப் பார்க்க முடிந்தது. பிறகு டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த முதல் இரு படங்களுக்கும் ஓரளவு வரவேற்பு இருக்கவே செய்தது.

jems-bond-spectre-stills-

மூன்றாவதாக அவர் நடித்து வந்துள்ள ஸ்பெக்டர் படம் வந்ததே தெரியவில்லை. படத்தின் ரிசல்டும் படுமோசம். 245 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பிரிட்டனின் மிக காஸ்ட்லி படம் இது. வசூலைப் பொருத்தவரை அவ்வளவு மோசமில்லை.

நேற்று வரை 548 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், கதை, காட்சியமைப்புகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முக்கிய அம்சமே விறுவிறுப்பும், வேகமான காட்சி நகர்வும்தான். இந்த இரண்டுமே ஸ்பெக்டரில் இல்லை என விமர்சித்துள்ளனர் சர்வதேச சினிமா விமர்சகர்கள்.

சர்வதேச அளவில் கடந்த அக்டோபர் 26-ம் தேதியே இந்தப் படம் வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் நவம்பர் 6-ம் தேதி வெளியானது. இந்தியாவில் நாளைதான் வெளியாகிறது.

இந்தப் படத்தில் டேனியல் க்ரெய்க், மோனிகா பெல்லூச்சி, லீ செய்டாக் இடையே இடம்பெறும் சில முத்தக் காட்சிகள் ‘ரொம்ப மோசமாக’ இருப்பதாகக் கூறி இந்திய தணிக்கைக் குழு அனுமதி தர மறுத்துவிட்டதால் அந்தக் காட்சிகளை வெட்டிவிட்டு ரிலீஸ் செய்கிறார்கள்.

இயான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 24வது ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர்!

Related Posts