யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடாக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நிறுவனத்தினூடாக வறுமைநிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குரிய தேவைக்கேற்ப செயற்கை அவயவங்கள் நடமாட உதவும் உபகரணங்கள் மற்றும் உளவள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றை வசதி படைத்த மாற்றுத்திறனாளிகள் தமது இயலுமைக்கேற்ற தொகைகளை செலுத்திப்பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், எமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள் வார நாட்களில் இல 5,பழைய பூங்கா வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரடியாவோ அல்லது 021-2222574 எனும் தொலைபேசி இலக்கமூடாகவோ தொடர்பை மேற்கொள்ள முடியும் என்றார்.