ஜெயாவின் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, தமிழகத்தை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை தேவை எனவும், அவருக்கு அப்பலோ வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட சிகிச்கை தொடர்பான முழு அறிக்கையையும் சேகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், அவரின் மரணம் மர்மாகவே காணப்படுகின்றது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், அ.தி.மு.க சார்பில் எவ்வித விளக்கங்களும் முன்வைக்கப்படவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அரசியல் வட்டாரங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் பல குழப்பங்கள் தொடர்கின்ற நிலையில், குறித்த நிறுவனம் இன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts