ஜெயாவின் மரணத்திற்கு நீதிகோரி பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் 8ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி பன்னீர்செல்வம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது காலம் கடந்து வந்திருந்தாலும் தாம் பாராட்டுவதாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts