ஜெயலலிதா மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழக தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்கள் உள்ளட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிப்பில், ஜெயலலிதா மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். லட்சக்கணக்கன அதிமுக தொண்டர்கள் உள்ளங்களில் என்றும் அவர் நிறைந்திருப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணாமக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts