ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கும் கடந்த மே 16 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 68 மையங்களில் வைத்து வாக்குப்பதிவு எண்ணும் நடைபெற்று வருகிறது. இதில், அண்மை நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக 86 தொகுதிகளிலும் பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

twitter-modi

தற்போதய நிலையில், பாதிக்கும் மேலான தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்று வருவதால், அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. இதனால், 6-வது முறையாக தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் முதல் அமைச்ச்ருமான ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தேன். மேலும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts