ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையே கருணாநிதிக்கும்!

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்ய டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை புதிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை இன்று மதியம் வெளியிட்ட புதிய செய்திக் குறிப்பில், “தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி 15-ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்புக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு பிரத்யேக மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை இரவு 11.10 மணியளவில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையே தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நுரையீரல் தொற்று, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்ட செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,தொடர் சிகிச்சை பெற்ற வந்த அவர் டிசம்பவர் 5ம் திகதி அவர் காலமானார்.

Related Posts