ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த தொண்டர்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என கோஷமிட்டபடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

தமிழகத்தின் தாம்பரம் – கடப்பேரி பகுதியைச் சேர்ந்த சற்குணம் (31), அதிமுக தொண்டர். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், காயத்திரி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று இரவு 07.00 மணியளவில் தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் அருகே வந்த சற்குணம், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து உண்மையான தகவல் தெரிவிக்க வேண்டும் என கோஷமிட்டபடி, கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றி திடீரென தீக்குளித்தார்.

அருகில் இருந்த போக்குவரத்து பொலிசார், தீயை அணைத்து படுகாயமடைந்த சற்குணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாம்பரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Posts