ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வரை வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts