ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஏராளமான அதிமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வளர்மதி, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்தவறே அரசு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.

பொறாமை பிடித்த சிலர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Related Posts