ஜெயப்பிரதா மகன் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உயிரே உயிரே. இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.
ராஜசேகர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த சத்யம், படத்தை டைரக்டு செய்தவர். ஜெயப்பிரதாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
சமீபத்தில் ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’ படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்து ரஜினியும் பாராட்டினார். அத்துடன் தியேட்டர்களில் தனது ‘லிங்கா’ படத்துடன் இணைத்து அந்த டிரெய்லரை வெளியிடவும் ஏற்பாடு செய்தார்.
அதுமட்டுமின்றி உயிரே உயிரே படத்தில் கவுரவ தோற்றத்தில் சில காட்சிகளில் நடிக்கவும் சம்மதித்தாராம். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியும் ஜெயப்பிரதாவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அதனாலேயே இந்த படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். ரஜினி நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக உள்ளது.
காதல் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. சித்துவும், ஹன்சிகாவும் சென்னையில் இருந்து விமானத்தில் கோவா புறப்படுகின்றனர். அவர்களுக்குள் நடக்கும் மோதலும் காதலுமே கதை.
சென்னை விமான நிலையத்தில் முக்கிய காட்சிகள் படமாகி உள்ளது. கோவாவிலும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.