பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை 4 மணியவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயகுமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி பல போராட்டங்களில் கலந்துகொண்டார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் ஜெயகுமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஜெயகுமாரிக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை அது தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளவில்லை.
குறைந்த பட்சம் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவோ, பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குற்றச்சாட்டுகளின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.