ஜெனீவா விவகாரத்தில் கூட்டமைப்பு ஒரே கருத்து நிலைப்பாட்டிலேயே இருக்கிறது

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மான விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்து கூறப்பட்டிருந்தது.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கால அவகாசம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களில் ஐக்கியப்பட்ட நிலையிலேயே உள்ளது எனவும், இதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் தமக்குள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கான கால அவகாசம் வழங்குவது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியான அறிக்கைகளை வெளியிட்டிருந்ததுடன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்து இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts