யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தப் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையாகப் பாடுபட்டு உழைத்தவர் என இதன்போது உரையாற்றிய வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
அத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அமோக வாக்குகளாலேயே இப்புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதற்கான நன்றிக் கடனாக சந்திரிக்கா எம் மக்கள் மீது அன்பு பாராட்டுகின்றார் என்று நாம் நினைக்க இடமுண்டு எனக் கூறிய, விக்னேஸ்வரன், சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உரை முழுமையாக..