ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நெகிழ வைக்கும் அஜித்!

இதுவரை அஜித்தைப்பற்றி அவருடன் நடிக்கும் நடிகைகள்தான் பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் இப்போது அவரது படத்தில் நடித்து வரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளும் அஜித் பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.

அதுபற்றி அவர்கள் கூறுகையில்,

அஜித்தைப்பொறுத்தவரை பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பார். சகஜமாக பேசிப்பழகுவார்.

அதோடு, காட்சிகளில் தன்னுடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களைகூட அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு விசாரித்துக்கொள்வார்.

பின்னர் நல்லா பண்ணுங்க பெஸ்ட் ஆப் லக் என்று அனைவருக்கும் கைகொடுத்து விட்டுத்தான் நடிக்கத் தொடங்குவார்.

மேலும், அப்படி ஒருமுறை பெயரைக்கேட்டு தெரிந்து கொள்பவர், அதன்பிறகு ஸ்பாட்டில் நம்மை பார்க்க நேர்ந்தால், அதே பெயரை சொல்லி அழைத்து பேசுவார். ஒரு முன்னணி நடிகர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளையும் அழைத்து அன்போடு பேசும்போது மனசுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்

Related Posts