ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை : ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாது!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற்திட்டங்கள் 58 இல் 6-01 இருந்து 6-08 வரையான பிரிவுகளை நீக்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிரிவுகளில் ஓருனச் சேர்க்கை குறித்த விடயங்கள் அடங்குவதாகவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றுக்கு இணங்கியுள்ளதாகவும், ஏற்றுக் கொள்ள முடியாதவை தொடர்பில் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts