ஜாம்பவானிடம் பொன் வார்த்தைகளை பெற்ற இந்திய வீரர்கள்

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.

kholi2

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில உள்ள நார்த் சவுண்டின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இதற்காக போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்துள்ள இந்திய அணி செயின்ட் கிட்ஸ் நகரில் இருந்து ஆண்டிகுவா சென்றுள்ளது.

அங்கு வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கியுள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர் கொடுத்த ஆலோசனைகள் ‘பொன்னான வார்த்தைகள்’ என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Virat Kohli

இந்திய அணி தலைவர் விராட் கோலி, தவான், ரகானே, முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் போட்டி டிப்ஸ் வழங்கினார். பின்னர் அனைவரும் அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

சர் விவியன் ரிச்சர்ட்சிடம் டிப்ஸ் பெற்றது குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அது ஒரு அற்புதமான தருணம். அவரிடம் இருந்து பொன்னான வார்த்தைகளை பெற்றோம். இது என்றும் நினைவில் நிற்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய வீரர்களை சந்தித்தது குறித்து பி.சி.சி.ஐ. தனது டுவிட்டரில் ‘‘ஆண்டிகுவாவில் ஒன்றாக ராஜாவும் (விவியன் ரிச்சர்ட்ஸ்), இளவரசரும் (விராட் கோலி). வீரர்களை அவர் சந்தித்தது மறக்க முடியாததும், சந்தோஷமானதும் ஆகும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிசிசிஐ இணைய தளத்தில் ‘‘விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுபோல் இந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரஹானேயின் அமைதியான திடமான அணுகுமுறையை விரும்புவதாகவும் கூறினார்.

அத்துடன் சவால்களை எதிர்கொள்ளும்போது எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கக்கூடாது. போட்டியை ரசித்து விளையாட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஸ்டூவர்ட் பின்னி தன்னை அறிமுகப்படுத்திய போது, 1983-ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை அவரது தந்தை ரோஜர் பின்னியுடன் விளையாடியது மறக்க முடியாத நினைவுகள்’’ என்றார்.

Related Posts