ஜானக வழக்கு: முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறை

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கே நேற்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இதில் இரண்டாவது சந்தேகநபரான சண்முகநாதன் சுதாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து இன்று இவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2008ம் ஆண்டு அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts