இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் வேளையில் இணைத்துக்கொள்கின்றனர்.
வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு எடுக்கிறார்களாம்.
இது தொடர்பில் பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளதாம். இதை கிறிஸ்டோபர் பீம் என்ற பத்திரிகையாளர் உறுதிப்படுத்தி ஆதாரங்களுடன் செய்தியும் வெளியிட்டுள்ளார்.
ஒருவருக்கு வேலையில் நாட்டம் இருக்குமா, அவர் சரியாக வேலை பார்ப்பாரா, அவரால் நிறுவனத்திற்கு லாபம் இருக்குமா, சக ஊழியர்களுடன் ஒத்துப் போவாரா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க ஜாகத்தையே பெரும்பாலான நிறுவனங்கள் நம்புவதாக இவர் கூறுகிறார்.
மேலும் சிலர், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களை வேலைக்கே சேர்ப்பதில்லையாம். குறிப்பாக கன்னி ராசிக்காரர்கள், அதிலும் அக்டோபர் 23ம் திகதி முதல் செப்டம்பர் 22ம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளதாம். காரணம், இந்தத் தேதியில் பிறந்த கன்னி ராசிக்காரர்களுக்கு பலரும் வேலை தர விரும்பவதில்லையாம்.
ஆனால் கன்னிராசிக்காரர்களும் விடுவதில்லை. தங்கள் மீது பாரமுகமாக இருக்கும் நிறுவனங்களுக்கு தங்களது பாணியில் ஆன்லைனிலேயே வேண்டுகோள் விடுத்து போஸ்ட்டுகள் போட்டுத் தள்ளுகின்றனர்.
தங்களது திறமையைப் பாருங்கள் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். மற்றவர்களை விட நாங்கள்தான் சின்சியராக வேலை பார்ப்போம், அன்பு காட்டுவோம், கோபப்பட மாட்டோம், நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் சொல்லி வேலை கேட்கிறார்களாம்.