ஜாக்கிசான் பாணியில் வடிவேலு போடும் காமெடி சண்டை

காமெடி நடிகர் வடிவேல் ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’, படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ‘எலி’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

vadivelu-satha

சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து வடிவேலு சதா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியொன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. வசன காட்சிகளும் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் வடிவேலு, வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் இடம் பெறுகிறது. பிரத்யேகமாக இந்த சண்டை காட்சியை படமாக்குகின்றனர். முதலில் ஆக்ஷன் சீன்களில் நடிக்க வடிவேலு தயக்கம் காட்டினாராம்.

அவருக்கு இயக்குனர் ஜாக்கிசான் படங்களில் இடம்பெறும் காமெடி சண்டையை போல் இதை எடுப்பதாகவும், குழந்தைகள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜாக்கிசானின் காமெடி சண்டை காட்சிகளையும் காட்டியுள்ளார். இதையடுத்து வடிவேலு இந்த சண்டைக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம். ஜாக்சிசான் சண்டை காட்சிகள் போன்று இதை எடுக்கின்றனர்.

Related Posts