ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்குமாறு, தமிழகத்தில் பரவலாக போராட்டங்களும், மத்திய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அகதிகளும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு, ஓமானில் உள்ள தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓமானில் பணியாற்றச் சென்றுள்ள தமிழர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து, ஜல்லிக்கட்டுக்காக, தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் போராட்டம் நடத்தினர்.

Related Posts