Ad Widget

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் கத்தி குத்து: 19 பேர் கொலை

சகமிஹரா நகரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய ஜப்பனீஸ் முதியோர் இல்லத்தில், கையில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை வெறித்தனமாக தாக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

japan

ஜப்பான் நாட்டில் கனகவா மாகாணத்தின் சகமிஹரா நகரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய ஜப்பனீஸ் முதியோர் இல்லத்தில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் உள்ளே சென்றே 26 வயதுமிக்க மர்ம நபர், கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அங்கிருந்தவர்களை வெறித்தனமாக தாக்கி உள்ளார். இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச் சம்பவம் குறித்து முதியோர் இல்லத்தின் நிர்வாகி ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அனைவரையும் மீட்டு, ஆம்புலன்சுகள் மற்றும் போலீஸ் வாகனங்களில் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதனை மருத்துவர்கள் 19 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், தப்பியோடிய மர்ம நபர் அதிகாலை 3.00 மணியளவில் தானாகவே கனகவா மாகாண போலீஸாரிடம் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உலகில் மாற்றுத்திறனாளிகள் இருக்கக் கூடாது என்று இதுபோன்ற தாக்குதலை நடத்தியதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர் முதியோர் இல்லத்தின் முன்னாள் பணியாளர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக 2008-ஆம் ஆண்டில் ஒருவர் டோக்கியோவின் அகிஹபாராவில் மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான கத்திக்குத்து சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts