ஜப்பானிய மொழியிலும் வெளியாகிறது ரஜினியின் பாட்ஷா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. 1995ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராயாக இருப்பர்.

21 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு டிஜிட்டல் வெர்ஷனில் படத்தை தயார் செய்துள்ளனர். ஏற்கனவே சிவாஜி நடித்த கர்ணன், எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி ஹிட் அடித்தன.

அந்த வரிசையில் பாட்ஷா படத்தையும் வெளியிட இருக்கின்றனர்.

சத்யா மூவிஸ் தயாரிப்பில் தேவா இசையில் உருவான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தற்போது 5.1 ஒலி வடிவத்துடன் முழுதும் படத்தை டிஜிட்டலில் மாற்றியுள்ளனர்.

ரஜினிக்கு ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் உள்ளதால் அங்குள்ள ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதனால் ஜப்பான் மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாட்ஷா திரைப்படம் புது வடிவம் பெறுகிறது.

Related Posts