ஜன செத பெரவமுன யாழில் வேட்பு மனு தாக்கல்

vote-box1[1] (1)வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜன செத பெரவமுன இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் தலைவர் வண.பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினரே வேட்பு மனுவை யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இன்று கையளித்னர்.

வடமரசாட்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஜெயச்சந்திரன் என்பரை முதன்மை வேட்பாளராக்கொண்டு தமிழ் சிங்கள முஸ்லிம் என மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இக் கட்சி சார்பாக வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts