முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
இந்நிலையில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்பு படைப்பிரிவின் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை பலர் இறந்திருக்கலாமெனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.