ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஜனாதிபதியின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக உறுதியளித்துள்ளனர்

அத்துடன் 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts