ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு!

புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ifthar

முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சகல இனத்தவர்களும் சமாதானமாகவும் நம்பிக்கையுடனும் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

Related Posts