ஜனாதிபதி மாளிகையிலுள்ள பங்கர் பற்றிய செய்திகளால் அச்சுறுத்தல் இல்லை

ஜனாதிபதி மாளிகையில் நிலத்தின் கீழ் பதுங்குக் குழி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள கதைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.

army-jayanath-jayavereya

இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்கான குறித்த பதுங்குக் குழி அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தற்போது நாட்டின் பாதுகாப்பு நல்லமுறையில் இருப்பதால் இது குறித்து வௌியானமையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் பதுங்குக் குழி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, எதிர்கட்சியினர் அண்மையில் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts